மத்திய வங்கி ஆளுநராக ஜனாதிபதியால் அஜித் நிவாட் கப்ரால் நியமனம்.

எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளது.

15ம் திகதி அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்க உள்ளார்.

இதற்கு முன்னர் சுமார் 9 வருடங்கள் மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் செயற்பட்டமை குறிப்படத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்