கொவிட்-19 தொற்றை முற்றாக இல்லாதொழிக்க வேண்டி மிரிசவெட்டியவில் இடம்பெற்ற விசேட ஒரு வார பிரித் பாராயண நிகழ்வு.

கொவிட்-19 தொற்றை முற்றாக இல்லாதொழிக்க வேண்டியும், அனைத்து உலக மக்கள் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திற்காகவும் பிரார்த்தித்து வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் மிரிசவெட்டிய விகாரையில் நடைபெற்ற விசேட ஒரு வார பிரித் பாராயண நிகழ்வு நேற்று (13) நிறைவடைந்தது.

அட்டமஸ்தானாதிபதி அதிவணக்கத்திற்குரிய கலாநிதி பல்லேகம சிறிநிவாச தேரர் மற்றும் ருவண்வெலி சைத்தியாராமாதிகாரி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரர் ஆகியோரின் அனுசாசனத்திற்கமைய மிரிசவெட்டிய ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி ஈதல்வெடுனுவெவே ஞானதிலக தேரர் இந்த பிரித் புண்ணிய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

கடந்த செப்டம்பர் 07ஆம் திகதி ஆரம்பமாகிய இந்த ஒரு வார பிரித் பாராயண நிகழ்விற்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் மஹா சங்கத்தினருக்கு அழைப்புவிடுத்தார்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்திற்கும், சுகாதார துறை மற்றும் பாதுகாப்பு துறையில் சேவையாற்றும் அனைவருக்கும், நாட்டு மக்கள் மற்றும் உலகவாழ் மக்கள் அனைவரது நலனுக்காகவும், கொவிட் தொற்று முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டியும் இந்த விசேட ஒரு வார பிரித் பாராயண நிகழ்வு இடம்பெற்றதாக மிரிசவெட்டிய ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி ஈதல்வெடுனுவெவே ஞானதிலக தேரர் தெரிவித்தார்.

ஒரு வார பிரித் பாரயண நிகழ்வின் ஏற்பாட்டிற்கு பிரதமர் அலுவலகம் அனுசரணை வழங்கியிருந்தது.

ஏழாம் நாள் பிரித் பாராயண நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ, கௌரவ அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்தே, சன்ன ஜயசுமன, ஷெஹான் சேமசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டீ.பீ.குமாரசிறி, வட மத்திய மாகாண முன்னாள் முதல்வர் எஸ்.எம்.ரஞ்சித், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, பௌத்த விவாகரங்களுக்கான ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்