கப்ராலை கைது செய்து மத்திய வங்கி ஆளுநராக நியமிப்பதை தடுத்து கட்டளை பிறப்பிக்குமாறு மனு…

மத்திய வங்கி ஆளுராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஆணைக்குழு இறுதி அறிக்கையில் 2005 – 2015ம் ஆண்டு காலப் பகுதியில்  10.4 – 10.6 பில்லியன் ரூபா அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த காலத்தில் மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் செயற்பட்டதாகவும் எனவே அந்த மோசடிக்கு அஜித் நிவாட் கப்ரால் பொறுப்புக் கூற வேண்டியவர் என்றும் கீர்த்தி தென்னகோன் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் அஜித் நிவாட் கப்ராலை கைது செய்து தடுத்து வைத்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்புக்குமாறும் அவரை மத்திய வங்கி ஆளுநராக நியமிப்பதை தடுத்து கட்டளை பிறப்பிக்குமாறும் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தனது மேன்முறையீட்டு நீதிமன்ற மனுவில் கோரியுள்ளார்.


கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்