இன்று வௌியாகியுள்ள கொரோனா பாதிப்பு நிலவரம்…

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 136 மரணங்கள் நேற்று (13) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 11,431 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 136 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 11,567 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது.

இவ்வாறு மரணமடைந்த 136 பேரில், 76 பேர் ஆண்கள், 60 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 106 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.