பட்டதாரி பயிலுனர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் ஏமாற்றாதீர்கள்_இம்ரான் எம்.பி

2020 ம் ஆண்டு பட்டதாரி பயிலுனர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரிகளை உடன் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார் . கிண்ணியாவில் (14)அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில் ஒரு வருடத்துக்கு பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும் மேலும் ஆறு மாதங்கள் நீடித்திருப்பது பட்டதாரிகளுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் அவர்களுக்கான கொடுப்பனவு தற்போது 20 ஆயிரம் ரூபாவே வழங்கப்படுகிறது இதனையும் நேர காலத்தோடு சில செயலகங்களில் வழங்கப்படுவதில்லை 10 ம் திகதிக்குள் வழங்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும் கால நீடிப்புச் செய்வதுமாக இருக்கிறது தற்போதை நிலையில் நிரந்தர நியமனத்தை குறைந்தது மூன்று மாதமாவது நீடித்து வழங்க வேண்டும்.

நாட்டின் நிலை அதிர்ப்திக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அத்தியவசிய பொருட்கள் என்ற பெயரில் சுமாரில் 600 க்கு மேற்பட்ட பொருட்களுக்கு விலை உயர்ந்து 77களில் போன்று பஞ்ச நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் விரும்பிய பொருட்களை வாங்க முடியாத நிலையும் மக்களை பல கஷ்டங்களுக்கு தள்ளியுள்ளது .ஐக்கிய நாட்டின் 48 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை பற்றி முதலாவதாக பேசப்பட்டுள்ளதுடன் பேசு பொருளாகவும் மாறியுள்ளது இதில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புள்ளா துமிந்த சில்வாவின் விடுதலை பற்றி பேசப்பட்டாலும் நாட்டின் பொருளாதார தடை ஏற்படாத வண்ணம் நிலைமை மோசமாகுவதை தடுக்க வழி செய்ய வேண்டும்.

இலங்கை முஸ்லிம்களுக்கான சட்டமாக ஹாதி நீதிமன்றத்தை ஒழிப்பது என்பதையும் ஏற்க முடியாது ஆங்கிலேயர் ஒல்லாந்தர் காலங்களில் கூட இச் சட்டம் இருந்தது காலத்துக்கு காலம் சட்டத்தை மாற்றினாலும் அதனை ஒழிக்க முற்படக்கூடாது 1952 களில் இச் சட்டம் ஆரம்பம் தொட்டு உள்ளது ஹாதி நீதிமன்றங்களை ஒழித்து ஏனைய நீதிமன்றங்களில் விவாக விவாகரத்து விடயங்களை பார்ப்பதென்பது ஏற்றுக் கொள்ள முடியாது இலங்கை நீதிமன்றங்களில் 2020 டிசம்பர் வரை 8 இலட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது இவ்வாறு இருக்க இந்த சட்டத்தில் கைவைப்பது அரசாங்கம் செய்யும் வரலாற்றுத் துரோகம் ஆகும்.

அரசினால் வழங்கப்பட்ட 2000 ரூபா கொரோனா கொடுப்பனவு எத்தனை நபர்களுக்கு வழங்கப்பட்டது இது சரியான முறையில் வழங்கப்படவில்லை 1008 வழி முறைகளை வைத்து இதனை மக்களுக்கு சென்றடைய செய்யவில்லை அரச ஊழியர்களின் சம்பளத்தை பெறுவது தொடர்பாக பேசப்பட்ட அத்தனையும் மக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

 

 

 


கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.