மலேசியாவில் 15 ஆயிரம் ஆவணங்களற்ற குடியேறிகள் கைது…

மலேசியாவில் கடந்த மே 2020 முதல் 2021 செப்டம்பர் 7 வரை 15,754 ஆவணங்களற்ற குடியேறிகள், 1,148 படகோட்டிகள், 781 கடத்தல்காரர்கள் Operation Benteng நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என மலேசியா மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) Hishammuddin Tun Hussein தெரிவித்திருக்கிறார்.

அதே காலக்கட்டத்தில், 2,232 ஆவணங்களற்ற குடியேறிகள் அவர்களது சொந்த நாட்டுக்கு நாடுடத்தப்பட்டிருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஆட்கடத்தல் செயல்பாட்டில் ஈடுபட்ட 2,381 வாகனங்களும் 540 படகுகள்/ கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,” என குறிப்பிட்டுள்ள அமைச்சர் மலேசியாவுக்குள் ஆவணங்களற்ற குடியேறிகள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கைகளை மலேசிய படைகள் தொடர்ந்து மேற்கொள்ளும் எனக் கூறியிருக்கிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்