அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்கள் சம்மேளன கூட்டம் : பள்ளிவாசல்கள் நிராகரித்தது !

அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்கள் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால மக்கள் நலத்திட்டங்கள் பற்றி ஆராயும் துறைசார்ந்த முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் போது அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, அனைத்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எச்.சீ.எம். லாபீர், செயலாளர் எம்.டீ. ஹமீத், அங்கத்தவர்கள், உலமாக்கள், துறைசார்ந்த முக்கியஸ்தர்கள், பிரதேச நலன் விரும்பிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இருந்தாலும் அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் அழைப்பிதழை பள்ளிவாசல்கள் நிராகரித்தது. இது தொடர்பில் முக்கிய ஜும்மா பள்ளிவாசல் ஒன்றின் தலைவர் கருத்து தெரிவிக்கும் போது தனிநபர் ஒருத்தரின் தூண்டுதலாலும் தெரிவாலும் அமைக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் சம்மேளனம் என்ற போர்வையில் பள்ளி வாசல்களின் தலைவர்களை பேச அழைத்த அழைப்பிதழை பள்ளிவாசல்கள் நிராகரித்துள்ளது. மரபு ரீதியாக புரிந்துணர்வு, நம்பிக்கை கட்டுப்பாடுகளோடு இயங்கிவரும் அனைதுப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தை விரும்பியவர்கள் கலைப்பதற்க்கும் விரும்பியவர்கள் அழைத்து பேசுவதற்கும் ஒன்றானது அல்ல என்றும் பள்ளிவாசல்களின் சம்மேளனம் இந்த ஊரின் அமானிதங்களில் ஒன்று அதனை அழித்துவிட யாரும் முன்நிற்க வேண்டாம் எனவும் இவ்வியக்கம் இறைவனுக்காக மக்கள் பணிகளை முன்னெடுக்கும் செயல்திட்டங்கலையே கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்