பிற்படுத்தப்பட்டோர் வீரவன்னியராஜா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு.

பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளரும், பாஜக பிரமுகருமான
வீரவன்னியராஜா நெய்வேலிக்கு வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்
தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை என்எல்சி விருந்தினர் மாளிகையில் நேரில் சந்தித்து
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார். அம்மனுவில கூறியிருப்பதாவது:
என்எல்சி நிறுவன அனல்மின் நிலையங்கள், சுரங்க விரிவாக்கங்களுக்கு பெரும்பாலான
விவசாயிகள் தங்களது நிலங்களையும், வீடுகளையும் வழங்கியுள்ளார்கள். இது வரை 40 ஆயிரம்
ஏக்கருக்கு மேல் நிலங்களை வழங்கியுள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு என்பது கானல் நீராகவே
இருந்து வருகிறது. வீடு, நிலம் கொடுத்தோர்களுக்கு ஒப்பந்த வேலைகளை வழங்குவதில்
முறைகேடு நடந்து வருகிறது.
இவர்களுக்கு நேரிடையாக நிரந்தர பணிகளை வழங்க வேண்டும். நிலத்திற்கு ஏக்கருக்கு ரூ.25
லட்சம் வழங்க வேண்டும். இதுவரை வழங்கியுள்ள மாற்று குடியிருப்பு இடங்களை மனைபட்டா,
அவரவர்களின் பெயரில் வழங்க வேண்டும். என்எல்சியை சுற்றியுள்ள கிராமங்களை என்எல்சி
நிறுவனம் தத்தெடுத்து, அனைத்து குக்கிராமங்களிலும் சாலை, குடிநீர், மருத்துவ, சுகாதார, கல்வி
வசதி போன்றவைகளை போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும். சுற்றியுள்ள
கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 500 அடிக்கும் கீழ் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதால்,
விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே, இவர்களுக்கு புதிய அனல்மின் நிலையம், சுரங்க விரிவாக்கங்களில் நிரந்தர பணிகளை
வழங்க வேண்டும்.
மூன்றாவது சுரங்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் உள்ள சூழலில், பாதிக்கப்பட
இருக்கின்ற கிராம் மக்களை தாங்கள் நேரில் வந்து பார்வையிட்டு, பொதுமக்களின் குறையை
தீர்க்க வேண்டும். நிலம், வீடு கொடுத்து பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்வு
காண தங்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து, என்எல்சி நிர்வாகத்தோடும், மாவட்ட ஆட்சித்
தலைவரோடும் சுமூக பேச்சுவார்த்தை காண முன் வர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில்
அவர் கூறியுள்ளார்.
படவிளக்கம்:
நெய்வேலிக்கு வருகை தந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைமைய பிற்படுத்தப்பட்டோர்
பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளர் வீரவன்னியராஜா நேரில் சந்தித்து கோரிக்கை
மனு அளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.