சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தல்களை ஏற்று, கட்டாயம் அனைவரும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவேண்டும்; கரைதுறைப்பற்று பிரதேசசபைத்தவிசாளர் – க.விஜிந்தன்

நாட்டில் தற்போது கொவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில், சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுததல்களைப் பின்பற்றி செயற்படவேண்டியது அவசியம் என கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசபையின் 40ஆவதுசாதாரண சபைக் கூட்டம் 16.09.2021நேற்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துளார்.

அந்தவகையில் இலங்கை சுகாதாரத தரப்பின்  அறிவுத்தலை ஏற்று கரைதுறைப்பற்று பிரதேசசபையின் அனைத்து உறுப்பினர்களும் கட்டாயமாகத் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அவ்வாறு தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளத் தவறும் சபை உறுப்பினர்கள், எதிர்வரும் சபை அமர்வுகளில் பங்குகொள்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

விசேடமாக தனிப்பட்ட மருத்துவ தேவைகருதி, கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளக்கூடாது என மருத்துவர்களால் பரிந்துரைசெய்யப்படுபவர்கள், மருத்துவரின் அறிக்கையினை சமர்ப்பித்தால் மாத்திரமே சபை அமர்வுகளில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை கரைதுறைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்டவர்கள் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்பவர்களுக்கு மாத்திரமே பிரதேசசபை உரிமங்களை வழங்கப்படும் எனவும் தவிசாளர் க.விஜிந்தன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.