ஒரு தசாப்த காலமாக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற ஹாஷிமுக்கு அக்கரைப்பற்றில் கௌரவிப்பு !

அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளராக கடந்த ஒரு தசாப்த காலமாக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற ஏ.எல்.எம். ஹாஷிமுக்கு அக்கரைப்பற்று “பைத்துல் ஹிக்மா” நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு அக்கரைப்பற்று நீர்ப்பூங்கா மண்டபத்தில் அமைப்பின் தலைவர் கலாநிதி. எம்.ஐ.எம். ஹனீபா இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி பிரதம அதிதியாக கலந்து கொண்டு அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு பெறுமானம் மிக்க கல்விச் சேவையாற்றி விடைபெற்ற ஏ.எல்.எம். ஹாஷிம் அவர்களின் பணிகளை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. ராசீக், அண்மையில் பதவியேற்ற அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம். ரஹ்மத்துல்லாஹ் மற்றும் கல்வி அதிகாரிகள், கல்விமான்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள், பைத்துல் ஹிக்மா நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்