கல்முனை ரோயல் வித்தியாலத்திற்கு றிஸ்லி முஸ்தபா விஜயம் !

கல்முனை கல்வி வலயத்திலுள்ள கல்முனை ரோயல் வித்தியாலத்திற்கு  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனகட்சியின் கல்முனை தொகுதி முக்கியஸ்தகரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர்சபை   உறுப்பினர் றிஸ்லி முஸ்தபா அவர்கள் நேரடியாக

விஜயம் மேற்கொண்டு பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் பாடசாலை அதிபர்

எம். எச். எம். அன்சார் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

பாடசலை அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க இங்கு விஜயம் செய்த ரிஸ்லி முஸ்தபா அவர்கள்

மேலும் பாடசாலை நிலைமைகளை

பார்வையிட்டதுடன் பாடசாலையில் நிலவும்

பெளதீக குறைபாடுகள் தொடர்பிலும் விரைவில் உரியவர்களின் கவனத்துக்கும் கொண்டு சென்று

நடவடிக்கை எடுப்பதாகவும்,மேலும் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக தன்னால்லான உதவியினைமேற்கொள்ள ஒத்துழைப்பேன் என இதன் போது ரிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.

குறிப்பாக இப் குடியிருப்பு பகுதியானது

சுனாமி அனர்த்ததினால் பாதிப்படைந்த மக்களுக்காக அமைக்கப்பட்ட தொடர்மாடி குடியிருப்பாகும்இங்குள்ள

குடும்பங்களின் பிள்ளைகள் இவ்

பாடசாலையில் கல்வி கற்று வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்த விடயமாகும்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன்முஸ்தாபாவின் புதல்வர் ரிஸ்லி முஸ்தபா என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்