ஆலய அபிவிருத்திக்கு பிரதமரினால் நிதி ஒதுக்கீடு : பரிபாலன சபையினரிடம் காசோலை கையளிப்பு.

அரசாங்கத்தின் கொள்கை சட்டமான “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தின்கீழ் பிரதமரும் மற்றும் மதவிவகார அலுவல்கள் கலாசார அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களது வழிகாட்டுதலின்கீழ் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அம்பாரை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட ஆலயங்களின் அபிவிருத்திக்கான கொடுப்பனவு காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
காரைதீவு பிரதேச செயலாளர் சி.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் கலந்துகொண்டதுடன், அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா,  காரைதீவு உதவி பிரதேச செயலாளர், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்துகொண்டு காசோலையை வழங்கி வைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்