பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியினால் கிராமத்தின் அபிவிருத்தி…

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் கீழ் கிராமத்தை அபிவிருத்தி செய்தலின் உரையாடல் மூலம் பெற்றுக்கொள்வதற்கான விசேட கூட்டம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் காரைதீவு 6ம் பிரிவு பல் தேவை கட்டடத்தில் காரைதீவு பிரதேச சபையின் முன்னால் தவிசாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல வீர திசாயநாயக்க அவர்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு.ஜிவராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் காரைதீவு பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் எல்.மோகனகுமார்,  அவர்களும் காரைதீவு பிரதேச தொழில்நுட்ப உத்தியோகத்தர் சுந்தரலிங்கம்,மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சாயி லோஜினி ,கிராம உத்தியோகத்தர்,கிராமசேவக பிரிவு குழுக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் காரைதீவு பிரதேசத்திற்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல வீர திசாயநாயக்க அவர்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு.ஜிவராஜா அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.