நாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் என சுகாதாரப் பிரிவினர் கோரிக்கை?

நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கும் முடிவை எடுக்கும்போது நாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

சுகாதார சேவைகளின் பிரதிப்பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath)  ஊடகங்களிடம் இது தொடர்பில் கருத்துரைத்துள்ளார்.

நாட்டை முழுமையாக ஒரே நேரத்தில் திறக்க பரிந்துரைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுமையாகத் திறக்கப்படுமானால், நிலைமையை, அது இன்னும் மோசமாக்கும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, நாட்டை படிப்படியாகத் திறப்பது மிகவும் பொருத்தமானது என்று பரிந்துரைக்கப்படுகின்றது. இதனால் கோவிட் தொற்றுகள் ஏற்படக்கூடிய ஆபத்து காரணிகள் உள்ளதா என்பதை பார்க்கமுடியும் என்று ஹேரத் கூறியுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் பயன் கிடைத்து வரும் நிலையிலேயே அடுத்த வாரத்திலிருந்து நாட்டை மீண்டும் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்