வவுனியாவில் உள்ள இரு மதுபானசாலைகள் தனிமைப்படுத்தப்பட்டன.

வவுனியாவில் சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்பட்ட இரு மதுபானசாலைகள் சுகாதாரப்பிரிவினரால் இன்று தனிமைப்படுத்தப்பட்டன.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது அதிகளவிலானோர் ஒன்று கூடி நின்ற நிலையில், வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது சுகாதாரப்பிரிவினர் திடீர் சோதனை நடத்தினர். இதனையடுத்து வவுனியா மருகாகாரம்பளை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் மற்றும் ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் என்பன இவ்வாறு தனிமைப்படுததப்பட்டன.

குறித்த இரு மதுபான விற்பனை நிலையங்களும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்