“பெண்கள் அரங்கத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு !

காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனின் வழிகாட்டுதலின் கீழ் கொவிட் 19 கொரோணா தொற்று காரணமாக காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு “பெண்கள் அரங்கத்தினால்” உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிதா பிரதீபன், சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களும் சிரேஷ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.புண்ணியநாதன் உட்பட பலரும் கலந்துகொண்டு உலர் உணவுப்பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்