கிழக்கு மக்களை தரக்குறைவான வார்த்தைகளினால் வம்பிழுத்த ஹக்கீம் எம்.பியின் அண்ணன் : கிழக்கில் எழுந்தது எதிர்பலை !

கிழக்கிலிருந்து இலங்கை மக்களுக்காக அதிலும் குறிப்பாக முஸ்லிங்களுக்காக பேச உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸை மேட்டுக்குடி வர்க்க சில முதலாளிகள் கைப்பற்றி கொண்டு தொடர்ந்தும் நஞ்சு பூசப்பட்ட கருத்துக்களை தாங்கி கிழக்கு நோக்கி சொல்லம்பு விடுகிறார்கள். அல்லது விட செய்யப்படுகிறார்கள். தன்னுடைய இயலாமையை மறைக்க கட்சி தலைவர் ஹக்கீம் தான் இவர்களை இயக்குகிறார் என்பது என்னுடைய வாதம் என அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் சகோதரரும், மு.கா உயர்பீட உறுப்பினருமான ரவூப் ஹஸீர் இட்ட கிழக்கு மாகாண மக்களை கொச்சப்படுத்தும் விதமான பதிவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், வெளிநாட்டு சக்திகளின் அஜந்தாக்களை நிறைவேற்ற தடையாக இருக்கும் கிழக்கின் அரசியல் பிரதிநிதிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் கடந்தகாலங்களில் கட்சி முக்கியஸ்தர் சபீக் ரஜாப்தீனை கொண்டு இயக்கிய கட்சி தலைவர் ஹக்கீம் இப்போது தன்னுடைய அண்ணன் ஹசீரை கொண்டு இயக்கிக்கொண்டிருக்கிறார். இதற்கு ஆதாரமாக சபீக் ரஜாப்தீனை பதவிகளை வழங்கி கௌரவித்தமையை பார்க்கலாம்.

கிழக்கு மக்களின் வாழ்வியல், கலாச்சாரம், பண்பியலை கேள்விக்குட்படுத்த இந்த ஹஸீர் யார்? கிழக்கு  போராளிகள் உயிர்த்தியாகம் செய்து இரத்தம் சிந்தி வியர்வையை தண்ணீராக ஊற்றி வளர்த்த மரத்தில் இப்போது காலுக்கு மேல் கால்போட்டு கொண்டு பழம் சாப்பிடும் ஹசீருக்கு இப்படி பேச அதிகாரமளித்தவர் யார்? மு.காவை முன்னின்று வளர்க்க போராடிய தவிசாளர் முழக்கம் மஜீத் இவருக்கு கூறப்போகும் பதில் என்ன? முன்னிலை கேடயமாக இருந்து கட்சி வளர்த்த எம்.ஐ.எம். மன்சூர் இவருக்கு சொல்லப்போகும் பதிலென்ன? எதற்கெடுத்தாலும் வீராப்பு பேசும் சகோதரர் தவம் இவ்விடயத்தில் கூறப்போகும் நியாயம் என்ன?

எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காஸிம், எம்.எஸ்.தௌபீக், ஹாபிஸ் நஸீர், ஏ.எல்.எம். நஸீர், ஆரிப் சம்சுதீன் , ஏ.எம். ஜெமீல், ஏ.எம். றக்கீப்  போன்ற மரத்தின் அடி வேர்கள் இவருக்கு சொல்லப்போகும் சேதி என்ன? கட்சியிலிருந்து நிறுத்தப்படுவாரா ஹஸீர் ? இந்த விடயத்தில் கிழக்கின் மாநகர, பிரதேச, நகர சபை உறுப்பினர்களின் தூக்கம்/ பயம் எப்போது கலையும்? தலைவரின் நண்பன் அன்று பேசியதை தலைவரின் அண்ணன் இன்று பேசுகிறார். தலைவர் பேச முன்னர் இந்த களைகளை அகற்றி விடுங்கள். இல்லாது போனால் நிலை தலை மேலே வெள்ளமாகி விடும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்