தனியார் வைத்தியசாலையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு நபர் கைது.

நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைக்குண்டை தயாரிப்பதற்கு உதவிய குற்றச்சாட்டு தொடர்பில் திருகோணமலை பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்