அனைத்து நாட்டு மக்களிடமும் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்…

பூமியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் நிலையான சக்தி வலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் சக்தி வலு தொடர்பான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“அனைவராலும் கொள்வனவு செய்யக் கூடியதும், நம்பிக்கை மிகுந்ததுமான நிலையான சக்தி வலுவைப் பெற்றுக் கொள்வதற்குரிய வாய்ப்பை உறுதிப்படுத்தல்” எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த மாநாடு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்