நாட்டில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு?

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நாட்டை முடக்கத்திலிருந்து விடுவித்து, இரவு நேரங்கங்களில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

இதற்கமைய, இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து நாடு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, அவ்வாறு திறக்கப்படும் போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்