தேர்தல்களை தாமதமின்றி நடத்துங்கள் – சஜித் பிரேமதாச

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எந்த தாமதமின்றி நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

பொத்துவில் வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்தத் தேர்தல்கள் மக்களின் துடிப்பை சரிபார்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்துவதன் மூலம், இந்த நாட்டின் மக்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் உட்பட அனைவரும் அறிய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்