தேர்தலை நடத்திக் காட்டுமாறு அரசுக்கு சவால் விடுகிறார் சஜித்…

நாட்டு மக்களின் எதிர்ப்பலைகளுக்கு அஞ்சி மாகாண சபைத் தேர்தலை மேலும் பல மாதங்களுக்கு ஒத்திவைக்க அரசு முயல்கின்றது.

அரசுக்குத் துணிவு இருந்தால் காலம் தாழ்த்தாது உரிய காலத்துக்குள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் தேர்தல்களை நடத்திக் காட்ட வேண்டும்.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சவால் விடுத்துள்ளார்.

அம்பாறை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இந்த நேரத்தில் தேர்தலை நடத்தினால் மக்களின் வேதனைகளைப் புரிந்துகொள்ள முடியும். இதனால் சர்வதேசத்துக்குச் சென்று தேர்தல் தொடர்பில் பொய்களைக் கூறாது, உரிய காலத்தில் தேர்தலை நடத்துமாறு அரசுக்குச் சவால் விடுக்கின்றேன்.

தேர்தலை நடத்தினால் அரசு தொடர்பாக மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள முடியுமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்