அமைச்சர் பெசிலுக்கு எதிரான வழக்கு நவம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கடந்த 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலை அண்மித்த காலப் பகுதியில் திவிநெகும திணைக்களத்தின் கீழ் ஜீஐ குழாய்களை கொள்வனவு செய்து அவற்றை உள்ளூராட்சி மன்றங்களுக்கு விநியோகித்ததாக கூறப்படும் விவகாரத்தில் அரசாங்கத்துக்கு 33 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக கூறி நிதி அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷவுக்கும் முன்னாள் திவினெகும பணிப்பாளர் கித்சிறி ரணவக்கவுக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் நவம்பர் 16 ஆம் ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (27) விசாரணைக்கு வர தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே கொரோனா நிலைமையை அடிப்படையாகக் கொண்டு நீதிச் சேவை ஆணைக் குழு வெளியிட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய, குறித்த வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்க தீர்மானித்துள்ள நீதிபதி, அதனை நவம்பர் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்