நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி…

நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, முதற் கட்டமாக நாட்பட்ட நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் விசேட தேவையுடைய 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது 12 – 19 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேல் மாகாணத்தில் உள்ள சகல பிரதான வைத்தியசாலைகளிலும் நேற்று ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்