தெருவோர குப்பைகளை கட்டுப்படுத்த கல்முனை மாநகரில் புதிய நடவடிக்கை அறிமுகமாகிறது !

கல்முனை மாநகரில் அதிகரித்து வரும் திண்மைக்கழிவகற்றல் நடவடிக்கையை மேம்படுத்தி மாநகர மக்களுக்கு ஒழுங்கான சேவையான வழங்கும் நோக்கில் அன்றாட கழிவகற்றல் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக மாலை வேளைகளில் அவசர கழிவுகளாக துர்நாற்றம் வீசக்கூடிய , வீட்டில் வைத்துக்கொள்ள முடியாத கழிவுகளை அகற்றும் விசேட கழிவகற்றல் நடவடிக்கைகளை கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப்பின் ஆலோசனைக்கிணங்க கல்முனை மாநகரில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு விளக்கமளித்த அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கும் போது வழமையான கழிவுகளை வழமை போன்று வருகை தரும் வாகனங்களில் ஒப்படைக்குமாறும், துர்நாற்றம் வீசக்கூடிய , வீட்டில் வைத்துக்கொள்ள முடியாத கழிவுகளை மட்டும் மாலை வேளைகளில் வரும் வாகனத்தில் கையளித்து இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கமாறும் கேட்டுக் கொண்டதுடன் மேலும் பொது இடங்களில் கழிவுகளை வீசுவதில் இருந்து தவிந்து கொள்ளுமாறும், அவ்வாறு வீசுபவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், பிரதேசத்தை சுத்தமாக வைத்திருக்க மாநகர மக்கள் உதவுமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்த மாலை வேளை திண்மக் கழிவகற்றல் நடவடிக்கையானது கல்முனை மாநகர சபையினால் கல்முனை மாநகரில் மேற்கொள்ளப்படும் வழமையான திண்மக்கழிவகற்றல் நடவடிக்கை செயற்பாட்டிற்கு மேலதிகமாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.