வாழ்வோம் வளம்பெறுவோம் – கட்டம் 47இல், 54பயனாளிகள் உள்ளீர்ப்பு.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் நாற்பத்தேழாங் கட்டமானது 02.10.2021இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக இச்செயற்றிட்டத்தின் நாற்பத்தேழாவது கட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட  தீர்த்தக்கரை, சிலாவத்தை, நாயாறு ஆகிய பகுதிகளிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட ஐம்பத்துநான்கு குடும்பங்களுக்கு அரிசிப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வாழ்வோம் வளம்பெறுவோம் என்ற பெயரிலான செயற்றிட்டமானது குறுங்கால வாழ்வுடமை ஊக்குவிப்பு நோக்கில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

குறித்த செயற்றிட்டமானது ரவிகரனால் கடந்த 17.05.2014அன்றைய நாள் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.

அந்தவகையில் நடைபெற்று முடிந்த நாற்பத்தேழாவது கட்டத்துடன் இது வரையில் 2,826 குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

அத்தோடு புலம்பெயர்நாட்டில் வசிக்கும் குபேரன், சைலேந்திரி, செழியன் குஆகியோர் இக்கட்டத்திற்கான நிதி உதவியினை வழங்கியுள்ளார்.

மேலும் இந் நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் கலந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்