எரிபொருள் கொள்வனவிற்கு கடன் வழங்க ஓமான் இணக்கம்.

இலங்கைக்கு கடன் அடிப்படையில் எரிபொருள் வாங்குவதற்கு ஓமான் அரசாங்கம் முன்வந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதன்படி,ஓமான்  அரசு இலங்கைக்கு 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க உறுதியளித்துள்ளது.

இரு தரப்பினரும் மாதம் 300 மில்லியன் டொலர்களை விடுவிக்க ஒப்புக்கொண்டனர். கடனை திருப்பிச் செலுத்த ஐந்து வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு படிப்படியாக குறைந்து வருவதால், எரிபொருளை இறக்குமதி செய்யத் தேவையான டொலர்கள் கூட இல்லை.

இதனால் அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் இதற்கு தீர்வு காண பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தியிருந்தார்.

இதன் விளைவாகஓமான் கடன் வழங்க முன்வந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்