பிளவுகள் இல்லை, சஜித் தலைமையில் விரைவில் ஆட்சி அமைப்போம் – தலதா சபதம்

சஜித் பிரேமதாச தலைமையில் அணி ஒன்றை உருவாக்கி கட்சியை நடத்தி செல்வது பிரிந்து செல்வதற்கு அல்ல எனவும் நிச்சயமாக சஜித் பிரேமதாச தலைமையில் அரசாங்கமொன்றை உருவாக்குவதே நோக்கம் என்றும் அதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் தேவையில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் பிளவு காணப்படுவதாகவும் ஐந்து பிரிவாக உடைந்து உள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி சஜித் தலைமையில் புதிய அணியை உருவாக்கியது பிளவுபட்டு செல்ல அல்லவென தலதா அத்துகோரல சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு என செய்தி வெளியிட்டுள்ள குறித்த ஊடகம் உள்ளிட்ட குழுவினரே இந்த நாட்டில் மக்களை ஏமாற்றி வானத்தில் இருந்து பாம்பு வந்ததாகவும் கொரோனாவை அழிக்க பாணி உள்ளதாகவும் மூட நம்பிக்கைகளை வளர்த்து தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை பிடித்துக் கொள்வதற்கு செயல்பட்ட நபர்கள் என தலதா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் இந்த மூடநம்பிக்கைகளை கேட்டு ஏமாறாமல் எவ்வித சந்தேகமும் இன்றி இருக்கும்படியும் விரைவில் சஜித் தலைமையில் ஆட்சியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.