சிவனருள் அறநெறி முன்பள்ளி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோரக்கர் கிராமம் சம்மாந்துறையில் அமைக்கப்பட்டு வரும் கோரக்கர் பிள்ளையார் அறநெறிப்பாடசாலை, முன்பள்ளிக்கு சிவனருள் அறநெறி, நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு (05/10/2021) இன்றைய தினம் நடைபெற்றது.இன் நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஜனாப் மொகமட் கனிபா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வி.ஜெகதீசன் அவர்களும் மேலும் அம்பாறை மாவட்ட இந்துசமய கலாசார உத்தியோகத்தர் திரு.கு.ஜெயராஜி, சம்மாந்துறை கலாசார உத்தியோகத்தர் திருமதி. நா. சிறிப்பிறியா
சிவனருள் பவுண்டேசன் செயலாளர் திரு.வே.வாமதேவன், பொருளாளர்.
திரு.க.ஜனார்த்தனன் மற்றும் சம்மாந்துறை கோரக்கர் அறங்காவளர் சபை ஆலய தலைவர் ம. வாலசுப்பிரமணியம், மற்றும் செயலாளர் திரு த.அழகுராஜன், உபத்தலைவர் வே. மோகன் மற்றும் கோரக்கர் வித்தியாலய அதிபர் திரு. சோ.இளங்கோவன், பல்கலைக்கழக உறுப்பினர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரும், அறநெறிப்பாடசாலை பெறுப்பாசிரியர் அறநெறி ஆசிரியர்கள் மாணவர்கள் ,என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்படி கட்டிட விரிவாக்கம் காணி வாளாகத்தில் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் பொருத்துதல் பணிகளுக்காக ஐந்து இலட்சத்து ஐம்பது ஆயிரம் (5,50000/=) மேலும் நிர்வாக செலவு மற்றும் ஆசிரியர் கொடுப்பணவு இருபது ஆயிரம் ரூபாய் (20.000/=)மாதாந்தமும் ஒரு வருடத்திற்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செயற்றிட்டமானது அமரர்.வைத்திய கலாநிதி சண்முகசுந்தரம் கதிர்காமசேகரன் அவர்களின் ஞாபகார்த்தமாக அவுஸ்ரேலியாவில் வசிக்கும் கொழும்பு வைத்திய கல்லூரி தமிழ் வைத்திய குழுவினரால் நிதி அனுசரணை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.