காரைதீவு தவிசாளரினால் கொரோனா தொற்று தொடர்பில் விளிப்பூட்டும் பதாதைகள் திறந்து வைப்பு !

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று தொடர்பில் மக்களுக்கு விளிப்பூட்டும் பதாதைகள் திறந்து வைக்கும் நிகழ்வு மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் எம்.எம். இம்தியாஸின் தலைமையில் மாளிகைக்காடு பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது.

மாளிகைக்காடு மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில், காரைதீவு பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர் கே.கே. அமரானந்த, மாளிகைக்காடு கிழக்கு மற்றும் மேற்கு கிராம நிலதாரிகள், மாளிகைக்காடு, மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்க முக்கியஸ்தர்கள், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு பதாதைகளை திறந்து வைத்தனர்.

மாளிகைக்காடு அந்நூர் ஜும்மாப்பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி இஹ்ஸான் (ஸஃதி) துஆ பிரார்த்தனையை தொடர்ந்து அந்நூர் ஜும்மாப்பள்ளிவாசல் முன்றல், மாளிகைக்காடு மீன் பொதுச்சந்தை, மாளிகைக்காடு பிரதான வீதி ஆகிய இடங்களில் கொரோனா தொற்று தொடர்பில் மக்களுக்கு விளிப்பூட்டும் பதாதைகள் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்