அருவி பெண்கள் வலையமைப்பினால் பாடசாலைகள் துப்பரவுப் பணியுடன், சுகாதாரப் பாதுகாப்புப் பொருட்கள் வழங்கி வைப்பு…

எதிர்வரும்  வராங்களில் ஆரம்ப பாடசாலைகள் கற்றல் நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ள நிலையில்  மாணவர்களின் சுகாதாரம் மற்றும் நோய்  தொற்று  பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு கொம்மாதுறை விநாயகர் வித்தியாலத்தில் இன்றைய தினம் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன .
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டு பணிகளை முன்னெடுத்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான மட்டக்களப்பு  மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் சமூகத்தின் நலன் கருதி இச் சிரமதாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனனுடன்
அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள், வலையமைப்பின் பெண்கள் சிறுகுழு உறுப்பினர்கள், 2ம் கட்ட தலைமுறையினர்,  பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன், மட்டக்களப்பு வாகனேரி கோகுலம் வித்தியாலய மாணவர்களின்  சுகாதார பாதுகாப்பு  நடவடிக்கைகளுக்காக பாடசாலை  வளாகம் மற்றும் வகுப்பறைகளை துப்பரவு செய்யும்  பணிகளும் முன்னெடுக்கப்பட்டது, அத்துடன் விசேட தேவைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சுகாதார பாதுகாப்பு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் கல்குடா வலையக்கல்வி பணிமனையின் முகாமைத்துவப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. கனகசுந்தரம் ஜெயவதனன் அவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்