காரைதீவு சந்தி அரைசையடி பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்ற நவராத்திரி பூசை நிகழ்வு-2021

நவராத்திரி முதல் மூன்று நாட்கள் மலைமகளின் அம்சமான துர்கை அம்மனுக்கு உரியது. அதிலும் முதலாம் நாளில் வணங்கப்படும் நவதுர்காவின் முதல் அவதார வடிவமே “சைலபுத்ரி”. இவர், சதி, பவானி, பார்வதி அல்லது ஹேமாவதி என்றும் அழைக்கப்படுகிறார்.

முதல் நாள் வழிபாட்டை நிறைவாகச் செய்து முடித்தால், வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வறுமை இல்லாத, செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு வழி பிறக்கும். நமக்கு எதிரி, கடன் போன்ற தொல்லைகள் ஏற்படாமல் இருப்பதுடன் ஆயுள் விருத்தியும் செல்வ விருத்தியும் ஏற்படும் என்பது நம்பிக்கை!

நவராத்திரியின் முதல் 3 நாட்கள் மலைமகளின் அம்சமான துர்கை அம்மனுக்கு உரியது. அதிலும் மூன்றாம் நாளில் வணங்கப்படும் நவதுர்காவின் அவதார வடிவமே “சந்திரகாண்டா”.

இவருடைய கிருபையால் பக்தர்களின் அனைத்து பாவங்களும், துன்பங்களும், உடல், மன உபத்திரவங்களும், பேய் தடைகளும் ஒழிக்கப்படுகின்றன என்று கருதப்படுகிறது.

இவளை வணங்குவதால் நம் மனது சாந்தி அடைந்து எதிர்மறை எண்ணங்கள் விலகி வாழ்க்கையில் முன்னேறலாம்.

நடுவில் உள்ள (இவ்வருடம்) இரண்டு நாட்கள் ஞானசக்தியின் தோற்றமான இலட்சுமியின் ஆட்சிக்காலம்.

இன்றும் நாளையும் (4 மற்றும் 5ஆம் நாள்) இலட்சுமிக்கு உரியது. அதிலும் நாலாம் நாளில் வணங்கப்படும் நவதுர்காவின் அவதார வடிவமே “ஸ்கந்தமாதா”.

தன் பக்தர்களுக்கு சக்தி மற்றும் செல்வத்துடன் ஆசீர்வதிக்கக்கூடிய தெய்வம். வணங்குவோரை கைவிட மாட்டாள். மோட்சத்திற்கு இட்டுச் செல்வார் என நம்பப்படுகின்றார்.

மற்ற தேவிகளுக்கு இல்லாத சிறப்புகள் இவருக்கு உண்டு. இவரை வழிபடும் போது நாம் முருகனையும் சேர்த்து வணங்குகின்றோம். இதனால் இருவரின் ஆசி நமக்கு கிட்டுகின்றது.
திடமான நம்பிக்கையுடன் நம் குறைகளைக் களைந்து இந்த பாடலை தினமும் பக்தியுடன் பாடிவந்தால் இல்லத்தில் சுபீட்சம் பொங்கும், திருமகள் கண் திறப்பாள். செல்வம் பெருகவும், கடன்தொல்லை தீரவும் உதவும்.

நேற்றும் இன்றும் (4 மற்றும் 5ஆம் நாள்) ஞானசக்தியின் அம்சமான துர்கை அம்மனுக்கு உரியது. அதிலும் ஐந்தாம் நாளான இன்று வணங்கப்படும் நவதுர்காவின் அவதார வடிவமே “காத்யாயனி”.

கன்னியர் மனம் விரும்பும் படி, மணாளனை கொடுத்து கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள்.

காத்யாயனி தேவியை வழிபடுவதால், திருமணம் தொடர்பான எல்லா பிரச்சனைகளும் தீருவதாக நம்பப்படுகிறது. மாங்கல்ய தோஷம் போன்ற கடுமையான தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் சக்தி தேவி காத்யாயனிக்கு உள்ளது. தேவி காத்யாயனியை வழிபடுபவர் இல்லத்தில் அமைதியும் செல்வமும் தழைத்து வளரும்.

நவராத்திரி வழிபாட்டில் இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். ஆறாம் நாளான இன்று வணங்கப்படும் நவதுர்காவின் அவதார வடிவமே “காளராத்திரி”.

அம்மனின் இந்த வடிவம் தீய சக்திகள், பேய்கள், பிசாசுகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை அழிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த வடிவத்தில் உள்ள துர்கை அம்மனை தைரியம் அதிகரிக்கவும், அச்சத்தைப் போக்கவும் மக்கள் வணங்குகின்றனர்.
காளராத்திரி தேவியின் வாகனம் கழுதை. இவரது பார்வை பட்டாலே பாவம் நீங்குவதுடன், கெட்ட சக்திகள் அஞ்சி ஓடும் என்று மக்கள் நம்புகின்றனர்

சரசுவதி அந்தாதியை தினமும் அல்லது சரஸ்வதி பூஜை அன்றோ பாராயணம் செய்பவர் வாழ்வில் சகல விதமான ஞானங்களும், செல்வமும் நிறையும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.