பெண்களுக் கெதிரான வன்முறையினை விழிப்பூட்டும் “இல்லத்து வழக்காடு” நூல் வெளியிடப்பட்டது !

ஆசிய நிலையத்தின் அனுசரணையுடன் GAFSO நிறுவனத்தால் அமுல்படுத்தப்படும் பெண்களுக் கெதிரான வன்முறையினை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டத்தின்கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு அங்கமாக “இல்லத்து வழக்காடு” எனும் தலைப்பில் வெளியீட்டாளரும், திட்டபணிப்பாளருமான ஏ.ஜெ. காமில் இம்டாட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தக வெளியீடு காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றது .

இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியீட்டு வைத்தார். மேலும் காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ் பாத்தீபன், கணக்காளர் ஜயசர்மிகா, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேக்கா எதிரிசிங்க, காரைதீவு பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிட்டா உட்பட மாதர் அமைப்புக்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்