மருதமுனை வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகளை மக்களுக்கு உடன் வழங்குமாறு நாமல் ராஜபக்ச உத்தரவு

மருதமுனை 65 M வீட்டுத்திட்டத்தில் இதுவரை பகிரப்படாத வீடுகளை விரைவாக பகிர்ந்தளிக்க விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று(13) நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வீட்டுத்திட்டத்தினை பார்வையிட்டதுடன் உடனடியாக அவ்வீடுகளை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு  நடவடிக்கைகளை எடுக்குமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு பணிப்புரை வழங்கினார்.
இந் நிகழ்விக் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டி.வீரசிங்க,அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல் பண்டாரநாயக்கா, அமைச்சர் நாமல் ராஜபக்சவின் இணைப்பாளர் சட்டத்தரணி எம்.சிபான்,சிறிலங்கா பொதுஜன பெரமுனயின் கல்முனை தொகுதி அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா,கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,அமைப்பாளர்கள்,
பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்