மாகாணசபை என்பது 1987 ம் ஆண்டு முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன வினால் சிறுபான்மை தமிழர்களின் ஈழ போராட்டத்தை நிறுத்த இந்திய இலங்கையின் ஒப்பந்தத்தின் பிரகாரம் கொடுத்த ஒரு காணிக்கை என்

மாகாணசபை என்பது 1987 ம் ஆண்டு முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன வினால் சிறுபான்மை தமிழர்களின் ஈழ போராட்டத்தை நிறுத்த இந்திய இலங்கையின் ஒப்பந்தத்தின் பிரகாரம் கொடுத்த ஒரு காணிக்கை என் தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.
முள்ளிப்பொத்தானையில் அமைந்திருக்கும் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் மாகாண சபை தேர்தல் முறைமை சம்பந்தமாக ஊடகளுக்கு இன்று(13) கருத்து தெரிவிக்கையியிலே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:
 தற்போது உள்ள மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கவே   நல்லாட்சி அரசாங்கம்  மற்றும் தற்போதைய ஆட்சியில் இருக்கும் மொட்டு அரசாங்கமும் இதை மாகாண முறைமையை  முற்றாக இல்லாமல் செய்யும் யோசனையே உள் நோக்கமாக வைத்து செயற்படுகின்றார்கள்.
கடந்த வாரம்  இந்திய வெளிநாட்டு வெளியுறவு செயலாளர் வந்ததன் பின்  மாகாண சபை கதை திடீர் என பேசும் பொருளானது. இதன் பின்னனி பற்றி நாம் ஆராய வேண்டிய அவசியப்பாடு எமக்கு இல்லை இருந்தும் இந்த மாகாண சபை முறைமை சறுத்துக்கள், யோசனைகள்  மாற்றம்  போன்றன முழுமையாக சிறுபான்மை மக்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதே எமது கட்சியின் நோக்காக உள்ளது.
ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்றோம் என்பதற்காக முந்தி செயற்படகூடாது,நாளை ஆட்சி மாறலாம் என்ற கோணத்தில் சிந்தித்து செயற்படல் வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.