தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க ஆராய்வு

கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சுற்றுலாத்துறையின் எதிர்காலம் தொடர்பான கலந்துரையாடலின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய வெளிநாட்டு மாநாடுகள் மற்றும் நிகழ்வுகளை நாட்டில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் பங்கேற்புடன் அடுத்த வருடம் நாட்டில் பல நிகழ்வுகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார்.

சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் ஊட்டுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியும் என குறிப்பிட்ட அமைச்சர் கெஹலிய, சுற்றுலாத்துறைக்கு சுகாதாரத்துறை தனது பூரண ஆதரவை வழங்கும் எனவும் உறுதியளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்