இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானி இலங்கை வருகை.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் அதானி குழுமத்தின் தலைவர், இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானி உள்ளிட்ட குழுவினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

பிரத்தியேக இரண்டு விமானங்களில் அவர்கள் நேற்றிரவு நாட்டை வந்தடைந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

கௌதம் அதானி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளதாக ‘தி ஹிந்து’ பத்திரிகையில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

மேற்கு முனைய அபிவிருத்தி செயற்றிட்டம், எரிசக்தி துறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கௌதம் அதானி கலந்துரையாடவுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்