வவுனியா மாவட்ட இளைஞர் யுவதிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்க நடவைடிக்கை எடுக்குமாறு சிம்சுபன் கோரிக்கை

வவுனியா மாவட்ட இளைஞர் யுவதிகளின் விளையாட்டு திறன்களை  ஊக்குவிக்க நடவைடிக்கை எடுக்குமாறு சிம்சுபன் கோரிக்கை
வவுனியா மாவட்ட இளைஞர் யுவதிகளின் விளையாட்டு திறன்களை  ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கணேசலிங்கம்  சிம்சுபன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர்களின் கதை வேலைத்திட்டம் நிகழ்வில் தெரிவித்தார்.
இன் நேற்றயதினம் 27.10.2021 அன்று வவுனியா மாவட்ட இளைஞர் பயிற்சி நிலையத்தில் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் தலைமையில் நடைபெற்றது.
வவுனியா மாவட்ட இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகள் சார்ந்தும் வவுனியா மாவட்ட இளைஞர் யுவதிகளின் விளையாட்டு திறன்களை  ஊக்குவிக்கும் நடவடிக்கை தொடர்பாகவும், இளைஞர்களின் தொழில்வாய்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் மற்றும்தேசிய ரீதியில் வவுனியா மாவட்ட இளைஞர் யுவதிகளின் பங்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன்.
இன் நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரின் ஒழுக்கங்கமைப்பு செயலாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிர்வாக பிரதிப் பணிப்பாளர், பணிப்பாளர்சபை உறுப்பினர்கள், மாகாண பணிப்பாளர் , வவுனியா மாவட்ட உதவிப்பணிப்பாளர் , இளைஞர் சேவை அதிகாரிகள், பிரதேச சம்மேளன தலைவர்கள் , இளைஞர் பாராளுமன்ற மன்ற உறுப்பினர் மற்றும் இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்