பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் உள்ள அரசாங்கம் தன்னை இயங்கும் நிலையில் உள்ளது போன்று காட்ட முனைகிறது! சிறீதரன் எம்.பி

பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் உள்ள இந்த அரசாங்கம் தன்னை இயங்கும் நிலையில் உள்ளது போன்று காட்ட முனைகிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறைகளைக் கொண்ட முன்பள்ளியினை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இலங்கையிலே முன்பள்ளிகளுக்கு என்று ஒரு திடமான கொள்கை இல்லை முன்பள்ளிகளுக்கு மட்டுமல்ல கல்வியில் கூட கௌரவமான உறுதியான நீடித்து நிலைத்திருக்கக்கூடிய கல்விக் கொள்கை இல்லாததால்தான் இலங்கையின் பொருளாதாரம் அதாளாபாளத்ததுக்குள் தள்ளப்பட்டுள்ளதோடு குடும்ப அரசியல் மயப்படுத்தப்பட்ட சூழலுக்குள்ளும் தள்ளப்பட்டு இலங்கையின் பொருளாதாரம் இன்று நாணயத்தாள்களை அச்சிடுகின்ற பொருளாதாமாக மாறியிருக்கிறது. நாளாந்தம் நாணயத்தாள்களை அச்சிடுவதும் நாளுக்கு நாள் விலைவாசிகளை அதிகரிப்பதுமாகத்தான் இந்த அரசாங்கத்தின் செயற்பாடு மாறியிருக்கிறது. இது ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானது இல்லை. ஒரு நாட்டினுடைய வரவு செலவுத் திட்டம் குறையில் இருப்பதும் அரசாங்கத்திடம் இருக்கவேண்டிய வெளிநாட்டு இருப்புக்கள் இல்லாது இருப்பதும் இந்த நாடு பட்டினியை நோக்கி வறுமையை நோக்கி நகர்ந்து செல்வதையே வழிகாட்டி நிற்கின்றது.
அதேபோல் இன்று இலங்கையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் அதிகமான பட்டினியை நோக்கி இந்த நாடு நகர போகிறது என்பதனை இந்த நாட்டினுடைய குடும்ப அரசியலில் அங்கத்தவராக இருக்கின்ற சமல் ராஜபக்ஷ அவர்கள் நேற்று கூறியிருக்கிறார் நீங்கள் சோறு இல்லை என்றால் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடுங்கள் என்று அறுபதாம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வார்த்தைகளை 70 ஆண்டு காலப்பகுதியில் நடந்த சம்பவங்களை மீண்டும் அவர் நினைவூட்டி இருக்கிறார். ஆகவே எவ்வளவு தூரம் உலகம் வளர்ந்திருக்கிறது நாகரீகம் வளர்ந்திருக்கிறது. நாடுகளினுடைய பொருளாதாரம் வளர்ந்து இருக்கிறது ஆனால் இலங்கையில் மட்டும் மக்களை வதைக்கிற மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. கிளிநொச்சியில் இன்று ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கிற வெதுப்பகங்கள் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாடுகளை இன்றுதான் ஆரம்பிப்பது போன்று தென்னிலங்கையில் இருந்து வந்த அரசியல் வாதிகளால் படம் போடப்படுகிறது. பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் உள்ள இந்த அரசாங்கம் தன்னை இயங்கும் நிலையில் உள்ளது போன்று காட்டவே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உபதவிசாளர் கயன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உறுப்பினர்கள் கோட்டக் கல்வி அதிகாரி பிரதேச வைத்திய அதிகாரி பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் பிரதேச சபையின் செயலாளர் உத்தியோகத்தர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.