கல்முனை பிரதேசத்தில் களிகம்பு நிகழ்வு…

கல்முனைப் பிரதேச செயலக கலாசார அதிகாரசபையின் ஏற்பாட்டில் கல்முனைக்குடி கடற்கரை மைதானத்தில் களிகம்பு பயிற்சியும் அரங்கேற்றமும் இன்று (05)சிறப்பாக நடைபெற்றது.

“தெலஸ் மகோ பகன”  தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கலாச்சார அலுவல்கள் திணைக்களமும்,மாவட்ட செயலகமும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்தனர்.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி அவர்களும்,கெளரவ அதிதிகளாக கல்முனை சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலீஹ்,அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டி.எம்.றிம்சான்,கல்முனைக்குடி சமூர்த்தி வங்கி உதவி முகாமையாளர் எஸ்.எல்
எம்.அஸீஸ், கலாச்சார உத்தியோகத்தர் எம்.எஸ் பெளசுல் ஹிபானா  உட்பட பலர் கலந்து கொண்டனர்

முஸ்லிம்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் ஒன்றான களிகப்பு(பொல்லாடி)நிகழ்வு நீண்ட நாட்களின் பிறகு திறந்த வெளியில் நடைபெற்றமையால் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அதிகளவான பொதுமக்கள் கண்டுகளித்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்