யாழ். இருபாலை மக்கள் கடும் வெள்ளத்தால் பாதிப்பு !!!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொடர்ந்து பெய்யும் கன  மழையின் காரணமாக இருபாலை தெற்கு கிழக்கு வீடுகள் மற்றும் பெரும் பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கி காட்சியளிக்கின்றது.
இருபாலை தெற்கு புதிய செம்மணி வீதி, கட்டப்பிராய் வீதி, கலைமணி வீதி, ஆனந்தபுரம் வீதி மற்றும் வேளாதோப்பு வீதி பகுதிகளிலும் மற்றும் இருபாலை கிழக்கு வீதிகளில்  அதிகளவான வெள்ளநீர் வீதிகளில் தேங்கி நிற்பதன் காரணமாக  பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த இரு நாட்களாக குடாநாட்டில் அதிக மழை பொழிவதோடு இன்று அதிகாலை முதல் பெரும் மழை பொழிந்து வருகின்றது. இதனால் இருபாலை பகுதியில் உள்ள  பெரும் வயல்களும் குளங்களும் நிரம்பி வழிகின்றது இதன் காரணமாக இருபாலை தெற்கு கிழக்கு விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் குறித்த பகுதி மக்கள் ஒரு சிலர் கனமழை காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் வீடுகளை விட்டு வெளியேறி சனசமூக நிலையங்களில் தங்கியுள்ளனர். அத்தோடு இருபாலை கிழக்கு தெற்கு பகுதிகளிலுள்ள 20 மேற்பட்ட துருசுகள் நீர்பாசன பொறியியலாளரால் திறந்து விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்