புளியந்தீவு ஆனைப்பந்தி ஆலயத்தில் பக்திபூர்வமாக இடம்பெற்ற சூரன்போர்…

மட்டக்களப்பில் சிறப்புப் பெற்ற ஆலயங்களில் ஒன்றான புளியந்தீவில் அமைந்துள்ள ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் சிறப்பம்சமான சூரனை வதம் செய்யும் சூரன்போர் காட்சி வெகு சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் இடம்பெற்றது.

இந்துக்களின் விரத வழிபாடுகளில் முருகனுக்குரிய விரதமாகிய கந்தசஷ்டி விரதம் கடந்த 5ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஆறாம் நாளாகிய இன்று சூரனை வதம் செய்யும் விசேட வழிபாட்டு நிகழ்வு அனைத்து ஆலயங்களிலும் இடம்பெற்று வருகின்ற நிலையில் புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திலும் இடம்பெற்றது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ குமாரசாமி சர்மா பிரபாகரக் குருக்கள் தலைமையில் பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு முருகப்பெருமான் வெளிவீதியுலா வந்து சூரனை வதம் செய்யும் முகமாக காட்சிகள் நெறிப்படுத்தப்பட்டிருந்தன.

புளியந்தீவு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து முருகப் பெருமானின் படை அலங்காரம் செய்யப்பட்டு ஆனைப்பந்தி ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆனைப்பந்தி ஆலயத்தில் சூரன் வதம் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.