உள்ளூராட்சி அதிகார சபைகளில் மக்கள் பங்கேற்பதன் மூலம் நல்லாட்சியை ஊக்குவித்தல் தொடர்பான செயலமர்வு

ஹஸ்பர் ஏ ஹலீம்_
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வொன்று இன்று (12) இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி  அவர்களின் வழிகாட்டலில் இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பினால் இத் திட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. உள்ளூராட்சி அதிகார சபைகளில் மக்கள் பங்கேற்பதன் மூலம் நல்லாட்சியை ஊக்குவித்தல் மற்றும் வலுப்படுத்தல் எனும் திட்டம் ஊடாக இவ் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உள்ளூராட்சி மன்றங்கள் ஊடான அபிவிருத்தியின் போது மக்கள் பங்களிப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி நிறுவனங்கள் ஊடான பங்கும் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பிலும் இங்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.

குறித்த நிகழ்வில் தம்பலகாமம் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் மற்றும் இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் பணிப்பாளர் பொ.சற்சிவானந்தம், தம்பலகாமம் பிரதேச செயலக கள  உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர்கள்  கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்