தமிழ்நாட்டின் கனமழை பாதிப்புக்காக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து போதுமான நிதியினை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் வீரவன்னியராஜா வலியுறுத்தல்.

தமிழ்நாட்டின் கனமழை பாதிப்புக்காக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து போதுமான நிதியினை மத்திய அரசு போர்க்கால
அடிப்படையில் உடனடியாக வழங்க வேண்டும் என பாஜக பிரமுகரும், பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் அகில இந்திய
பொதுச்செயலாளருமான வீரவன்னியராஜா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:
சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில், கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்த நிலையில், அப்பகுதி எங்கும்
வெள்ளக்காடாக காட்சியளித்து. சென்னை மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். கடந்த காலங்களை ஒப்பீடும் போது,
சென்னையில் இவ்வாண்டு 40 விழுக்காடு மழை அதிகம். மாநகரத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கான
ஏற்பாடுகளை மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முடுக்கிவிட்டதோடு, நிவாரணப் பணிகளையும்
துரிதப்படுத்தியது வரவேற்க தக்கது. கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, நிவாரணப் பொருட்களை
வழங்கிய தமிழ்நாடு அரசு, நோய்த் தடுப்பு முகாம்களை அமைத்தது பாராட்டுக்குரிய ஒன்றாகும். இது ஒருபுறமிருக்க, கடந்த
10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக அரசு, தானே, நீலம், மடி, நாடா, வர்தா, ஒகி, கஜா ஆகிய புயல்களை
சந்தித்துள்ளது. இந்த புயல் காலங்களில், சென்னை மற்றும் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பெரும் பேரழிவு
வெள்ளத்தில் சிக்கியது.
அந்த பேரழிவில் இருந்து தக்க பாடத்தை கற்றுக்கொண்ட, கடந்த அதிமுக அரசு நீர்நிலைகளை கட்டமைத்து, துார்வாரி
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக, 2015-ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால், தமிழகம் சந்தித்த
இழப்பும், உயிர் பலியும், பொருளாதார இழப்பும் மிக மிக அதிகம். அதற்கு பிறகு சீரமைப்பு நடவடிக்கையை அதிமுக அரசு
மிக சிறப்பாக மேற்கொண்டிருந்தது. 2015 வெள்ளத்திற்கு பிறகு, சென்னையில் வெள்ளத்தை தடுக்க ரூ.2400 கோடி திட்டம்
அறிவிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மராமத்து பணிகளுக்காக ரூ.5000 கோடியை ஓதுக்கீடு செய்த அதிமுக அரசு, ஏரிகளை முறையாக தூர்வாரி தற்போது
ஏற்பட்டுள்ள பிரச்சினை முழுமை பெறாமல் பாதுகாக்க பேருதவியாக இருந்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை
முறையாக அகற்றியது, வடிகால் வாரிய மேம்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை செயல்படுத்தியது பாராட்டுக்குரிய
ஒன்றாகும். தமிழ்நாட்டின் கனமழை பாதிப்புக்காக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து போதுமான நிதியை மத்திய அரசு
போர்க்கால அடிப்படையில் ஒதுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.