தங்கமுலாம் பூசப்பட்ட ஆபரணங்களுடன் அக்கரைப்பற்றில் இளைஞர் கைது.
அக்கரைப்பற்றில் தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை வைத்திருந்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, நேற்று (12) மாலை அக்கரைப்பற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாண்டியடியை சேர்ந்த 19 வயது இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ஆபரணங்கள் அடங்கிய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதுடன், எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை