திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரியில் துவிச்சக்கரவண்டி தரிப்பிட திறப்பு விழா…

2000 ஆம் வருட A/L மாணவர்களினால் நிர்மாணிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் 19/11/2021 இன்று வெள்ளிக்கிழமை 10 மணியளவில் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு 2000ஆம் வருட உயர்தர பழைய மாணவர் சங்க தலைவர் திரு. யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.யோ.ஜெயச்சந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கௌரவ அதிதி வரிசையில்
ஆலையடி வேம்பு கோட்டக்கல்வி அதிகாரி திருமதி எம்.மயூரன்,கமு /திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி அதிபர் திரு. J. R. டேவிட் அமிர்தலிங்கம் அவர்களும் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு உப பிடாதிபதி தேசிய கல்விக் கல்லூரி மட்டக்களப்பு திரு.த.கணேசரெட்ணம்,கார்மேல் பற்றிமா கல்லூரியின் பிரதி அதிபர் திரு.A. சுமன், ஓய்வு நிலை அதிபர் திரு. K. S. கோபாலபிள்ளை,திருமதி. யோகேஸ்வரி கனக சபேஷன் (ஓய்வு நிலை பிரதி அதிபர்) பாடசாலை பிரதி அதிபர்களான திரு.மதியழகன் திரு.ஜெயந்தன்,ஆகியோரும் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் 2000 ஆம் வருட A/L மாணவ உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்