அகில இலங்கை ரீதியில் கமு /திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி சிறந்த பாடசாலையாக தெரிவு…

தேசிய அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவனதினால் தேசிய ரீதியாக நடத்தப்பட்ட ” விஞ்ஞானத்தின் ஊடாக உலகைப் புரிந்து கொள்ளல்” எனும் தொனியில் நடைபெற்ற போட்டியில் அதிகளவு மாணவர்கள் பங்கு பற்றிய பெருமைக்குரிய பாடசாலையாக THE BEST SCHOOL AWARD FOR BEST PERFORMANCE IN THE COMPETITION-2021 என்ற பெருமை எமது பாடசாலைக்கு கிடைத்துள்ளது.
இப்போட்டியில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை தரம்-8 சேர்ந்த மாணவி இவாஞ்சலின் பெற்றுள்ளார். மேலும் ஏனைய 12 மாணவர்கள் merit சித்தி அடிப்படையில் வெற்றியீட்டியுள்ளது பெருமைக்குரிய விடயமாகும்.

இம் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்று காலை 11 மணியளவில்கமு /திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி அதிபர் திரு. J. R. டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.யோ.ஜெயச்சந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் ஆலையடி வேம்பு கோட்டக்கல்வி அதிகாரி திருமதி எம்.மயூரன், அவர்களும் கார்மேல் பற்றிமா கல்லூரியின் பிரதி அதிபர் திரு.A. சுமன், பாடசாலை பிரதி அதிபர்களான திரு.மதியழகன் திரு.ஜெயந்தன்,ஆகியோரும் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் மேலும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு  சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது இரண்டாம் இடத்தை பெற்ற இவாஞ்சலினுக்கு வெள்ளி பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.