தங்கள் போராளிகளை அனுஷ்டிபப்பதற்கு ஜேவிபி யினருக்கு அனுமதி தமிழர்களுக்கு அனுமதி இல்லை என்பது இனவாத செயற்பாடே… (முன்னாள் பா உ) – ஞா.ஸ்ரீநேசன்)

(சுமன்)

சிங்களவர்களாக இருப்பதால் ஜேவிபி யினர் கார்த்திகை மாத்தில் தங்களுடைய போராளிகளை நினைவு கூர அனுமதி கொடுக்கின்ற அதேவேளை தமிழர்களாக இருப்பதால் போராட்ட தியாகிகளை அனுஷ்டிக்க முடியாது தடுப்பதானது இனவாத ரீதியான செயற்பாடாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் 20ம் திகதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவுகூர வழிபாடுகள் செய்ய வேண்டும் என அண்மையில் வணக்கத்துக்குரிய ஆயர்கள் அறிவித்திருந்தார்கள். அதே நேரத்தில் கார்த்திகை 27ல் தியாக ரீதியாகப் போராட்டம் செய்த போராளிகளை அனுஷ்டிப்பது உண்டு. அந்த நாளையும் இந்த நாளையும் அறிவித்திலின் காரணமாக ஏதும் குழறுபடிகள் குழப்பங்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பில் வினவியபோது உண்மையில் கத்தோலிக்கர்கள் மறைந்தவர்களை அனுஷ்டிக்கும் மாதமாக இது இருக்கின்றது. 02ம் திகதி நடைபெறும் விடயத்தை 20ம் திகதிக்கு மாற்றயிருப்பதாகவும், இத்தினத்திற்கும் மாவீரர் தினத்திற்கும் இடையில் எவ்வித குழறுபடிகளுக்கும் வாய்ப்பில்லை என்று தெரிவித்திருக்கின்றார்கள்.

ஆனாலும் இவ்விடயம் வழமையாகச் செய்யப்படாமல் இவ்வருடம் மாத்திரம் செய்வதால் பல குழறுபடிகள், சந்தேகங்கள் இன்னும் எற்படுகின்ற நிலைமைNயு காணப்படுகின்றது.

மேலும், ஜேவிபி யினர் கார்த்திகை மாதத்தில் தங்களுடைய போராளிகளை நினைவு கூருகின்ற செயற்பாட்டை தென்னிலங்கையில் மாத்திரமல்லாமல் நாடுபூராகவும் செய்கின்றார்கள். அவர்கள் சிங்களவர்களாக இருப்பதால் அவர்கள் அனுஷ்டிப்பதற்கு அனுமதி கொடுத்திருக்கின்ற அதேவேளை தமிழர்களாக இருப்பதால் விடுதலைப் போராட்டத்தில் மறைந்தவர்;களை, தியாகிகளை அனுஷ்டிக்க முடியாது என்று மறுப்பது இன ரீதியாகவும், இனவாத ரீதியாகவும் தடுக்கின்ற ஒரு செயற்பாடகவே இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.