கொரோனா தொற்றில் இருந்து மேலும் 418 பேர் பூரண குணமடைவு.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 418 பேர் பூரணமாக குணமடைந்து  (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 27 ஆயிரத்து 528 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 57 ஆயிரத்து 172 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனா தொற்றினால், நாட்டில் இதுவரையில், 14 ஆயிரத்து 158 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்