24 மணித்தியாலங்களுக்குள் மழை…

கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டலவியல் குழப்ப நிலை தாழமுக்கமாக வலுவடைவதால், பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்